இன்றைய சினிமா:
ஜனநாதன் இயக்கிய பேராண்மை.
தாலீத் ஒருவனது நாட்டுப்பற்றை
காட்டும் படம்.


நீ என்பது நீயல்ல
நெஞ்சம் கசக்கும்
என்னவள் நீயடி

நான் என்பது நானல்ல
உன் கரம் ஏந்தும் மலரடி
உன் கண்கள் வரைந்த ஓவியம்
என் இதையம் மிதித்து சென்றது

ரசிக்க மறந்த கவிஞனாய்
என் இதயம் பதறி சென்றது
உன் சிரிப்பும் அந்த வெட்கமும்
என் மனதில் மாயை செய்தது

இசை கருவிகள் இன்றி செவியோரம்
உந்தன் காலோசை இசைத்தன
பேசும் சக்தி இழக்கிறேன்
சிறகை இழந்து தவிக்கிறேன்

தனியாய் பறந்த பறவை நான்
பட்டம் போலே மிதக்கிறேன்
பட்டுப்போன மலரை
பொக்கிஷமா பார்த்து சிரிக்கிறேன்

தாய் மடி ஏங்கிய மனது இன்று
உன் மனதை கேட்க செய்யுது
உயிர்நாடி எங்கே ஒரு நொடி
என்னை பார்த்து பாரடி

நீ என்பது நீயல்ல
நெஞ்சம் கசக்கும்
என்னவள் நீயடி........

எழுத்து : Shiju NS

0 comments:

Post a Comment

 
Top