இன்றைய சினிமா:
ஜனநாதன் இயக்கிய பேராண்மை.
தாலீத் ஒருவனது நாட்டுப்பற்றை
காட்டும் படம்.

இதொன்றும் பெரிய அனுபவம் இல்லை” என்று நான் பலர் கூறும் ரயில்பயண நட்பைப் பற்றி கேலி செய்வதுண்டு, ஆனால் அது எனக்கு நடவாதவரைக்கு மட்டும் தான். இப்போது சத்தியமா திருந்திவிட்டேன்.

சென்னையில்  வாழ்கையை தானம் செய்து ரொம்ப நாளொன்றும் ஆகவில்லை, இரண்டு மாதமே இருக்கும். அப்போது தான் நான் என் முதல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். திடீரென்று என் சொந்த ஊர் நாகர்கோயில் வரை செல்ல வேண்டி இருந்தது. என் இயக்குனருடன் அனுமதி கேட்டுவிட்டு மதியம் 2 மணிக்கு போல் வடபழனியில் இருந்து என்னோடு பணிப்புரியும் உதவி இயக்குனர் நண்பர் ஒருவரோடு மாம்பலம் ரயில்நிலையம் வரை சென்றேன். என் அவசரத்துக்கு, அவனுதவி பெரிதாகத்தான் இருந்தது. Local ரயில்சீட்டை எடுத்துவிட்டு மாம்பலம் ரயில்நிலையத்திலிருந்து எழும்பூர் வரை சென்றேன். நன்றாகத்தான் இருந்தது அந்த குட்டி பயணம்கூட.

அங்கு சென்றால் எனக்கு கிடைத்தது ஒரு பேரதிர்ச்சி. நான் 3 மணியென்று எண்ணிய ரயில்வர 5.3௦ தாகுமாம் , அடக்கொடுமையே அதுவரை நான் என்னசெய்வது? வேறென்ன? முகப்புத்தகம்தான் என் நேரத்தை கடத்தியது.


4மணியானதும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பிளாட்பாரம் எண்:2என்ற அறிவிப்பு கேட்டது ரயில் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதா? என்று ஓடிச்சென்று பார்த்தால் , ரயிலைவிட நீளமான ஒரு வரிசை, கேட்டுப்பார்த்தால் “unreserved“ என்று கூறுகிறார்கள். இன்றையகதி அதோகதிதானென்று எனக்குள் நானே முணுமுணுத்துக்கொண்டேன். அடுத்த அதிர்ச்சி நெருங்கியது, மனிதாபிமானம், நியாயம், சட்டம், என்று வீண்கொள்கையில் வரிசையைய் ஒழுங்காக கடைப்பிடித்தேன்  அல்லவா? unreserved coach-இல் நிற்கக்கூட இடமில்லை . என் பின்னால் வந்த பெரியவர் தன் பேரன்கள் மூன்றுபேருடன் கழிவறை வாசலினருகே அமர்ந்துவிட்டார் . வெட்கம், மானம்  கொண்டவன் அல்லவா நான், அதற்கும் இப்போது வழியில்லை . ரயில் 5.30 மணிக்கு புறப்பட்டது. நிற்கக்கூட இடமில்லை மேல்மருவத்தூர்  சென்றதும் கிடைத்துவிடும் என்று சகபயணிகளின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டு ஏமாந்துதான்விட்டேன். மேல்மருவத்தூர்  ரயில்நிலையம் கடந்தது. இன்று சற்று நெரிசல் அதிகமாகத்தான் இருக்கிறது விழுப்புரம் சென்றால் எல்லாம் சரியாகிவிடுமென்று என் பசாத்திற்குரிய சகபயணிகளின் ஆறுதல் வார்த்தை, விழுப்புரம் வந்தது. இங்கு ஏற்றுமதி மட்டுமே , இறக்குமதிக்கு அனுமதி இல்லைபோல? கால்கடுக்க ஆரம்பித்தது . எவ்வளவு நேரம்தான் அந்த மூச்சுவிடமுடியாத நெரிசலில் ஒற்றைக்காலில் நிற்பது. இதில் கொடுமை என்னவென்றால் விழுப்புரத்திலிருந்து ஏறியது  ஒரு திருமணமான வடஇந்திய காதல் ஜோடி , தன் கணவனை இந்தியில் தாறுமாறாக திட்டித்தீர்தாள். சிறிதாக பொழுதுப்போக்கானது .

என்னருகில் நின்ற நபரைநான் இதுவரையிலும் கவனிக்கவில்லை , ஒவ்வொரு ரயில்நிலையத்திலும் தண்ணீர் வாங்க முயலுவேன்.ஆனால் என்ன செய்வது கூட்டத்திலுருந்து என்னால் நகரக்கூட முடியவில்லை. எதிர்பாராத வேளையில் என்னருகில் இருந்தநபர் தண்ணீர் பாடில்லை நீட்டினார் . இந்தா குடிச்சிக்கோஎன்று , நானும் மனசுல நல்லமனுஷன் இவருதான்னு புகழ்ந்திடேன். ரெண்டு மில்லிலிட்டர் குடிக்க கொடுத்துவிட்டு , பாட்டிலை என் பையில் பத்திரமாகவை என்றார் அந்த சுயநலவாதி நண்பர். அடிக்கடி அதே ரயிலில் பயணம்செய்பவர் கண்மூடிக்கொண்டே புள்ளிவிபரம் கூறுகிறார்.

மதுரையும் எட்டியது என்னிடமிருந்த ஒரேவொரு நம்பிக்கையும் கலைந்தன. மதுரையிலும் ஏற்றுமதி மட்டுமே இறக்குமதி இல்லை. அப்படியே ரயிலின் வெளியே குதித்துவிடலாமா என்றுகூட தோன்றியது. எனக்கிருக்கும் ஒரே ஆறுதல் அந்த சுயநலவாதி நண்பர்தான். சரியான காரணமே இல்லாமல் ரயில்வேதுறை , தமிழ்நாடு , இந்திய , ஏன் ஒபாமாவைக்கூட திட்டித்தீர்தோம் .அப்படி ஒரு கதிகேடு எங்களுக்கு.

கோயில்பட்டியருகே ரயில் நின்றது சரியான ரயில்நிலையம் தெரியவில்லை ஏனென்றால் மணி அதிகாலை 3.3௦, விழிகளில் தூக்கம் கதவையடைக்க கட்டளையிட சொல்லிக்கொண்டே இருந்தது. ரயில்நிலையத்தில் ரயில் நின்ற அந்த 5நிமிடம் உட்காரலாமென்று , நானும் அந்த பெயர்த்தெரிய சுயநலவாதி நண்பரும் முடிவெடுத்தோம் . அவர் டீ சாப்பிட்டார் , ஒரு பேச்சுக்குக்கூட டீ வேண்டுமாவென்று கேட்க்கவில்லை.

நகர்கோவில் வரை செல்லும் என்ற சத்தம் கேட்டது. உற்றுக்கேட்டோம் இருவரும். ஏதோ கோயம்பத்துரிலிருந்து வரும் ரயில் போல இருக்கிறது. சற்றும் யோசிக்கவேயில்லை ஓடி சென்று அந்த ரயிலில் ஏறிவிட்டோம்.எக்ஸ்பிரஸ் ரயில் சீட்டென்பதால் எந்த ரயிலிலும் செல்லுபடியகுமென்ற ஒரே ஆறுதல். உட்கார அழகானவொரு இடம்கிடைத்தது. ஏதோ சொர்க்கமருகில் இருப்பதைப்போல உணர்ந்தோம். அந்த சுயநலவாதி நண்பர் தன் தண்ணீர் பாட்டிலை தருமாறு கேட்டார். நானும் என் பையிலிருந்து எடுத்துக் கொடுத்துவிடேன். அடுத்த 2நிமிடத்துக்கு என்னதான் நடந்திருந்தாலும் எனக்கு தெரியாது. பலவருடங்கள் தூங்கதவனைப்போல் உட்கார்ந்த உடனே தூங்கிவிட்டேன். திடீரென முழிப்பு வந்துவிட்டது. கண்கள் கூசுமளவிற்கு  வெளிச்சம் , மணியைப்பார்த்தால் 8ஆயிருந்தது . என் முன்னிருந்த சுயநலவாதி நண்பரை காணவில்லை, ஒருவேளை திருநெல்வேலியில் இறங்கியிருக்கலாம். மூங்கில்போல் உடனே வளர்ந்து வெட்டப்பட்டது எங்களது நட்பு.. நான் சொர்கத்துக்கு வந்திட்டேன் அதுதான் சொந்த ஊருக்கு வந்துவிட்டேன்.


எழுத்து : Shiju NS

0 comments:

Post a Comment

 
Top