அவன் ஜனவரி இருபத்தியைந்தில்
பூட்டிய வீட்டில் கழுத்தில்
கயிறு மாட்டி மரித்துக்கிடந்தான்
அவனை அறிந்தவர்கள்
காதல் விவகாரமென்றார்கள்!
அவனுக்கு வேண்டியவர்கள்
கடன் தொல்லையன்றார்கள்!
அவன் உற்ற நண்பர்கள்
சினிமா பைத்தியமென்றார்கள்!
அவனை தவிர வேறுயாருக்கும்
இனி எப்போதும் தெரியப்போவதில்லை - அவன்
தற்கொலையை நேசிப்பவனென்று...!

0 comments:
Post a Comment