இன்றைய சினிமா:
ஜனநாதன் இயக்கிய பேராண்மை.
தாலீத் ஒருவனது நாட்டுப்பற்றை
காட்டும் படம்.


“என்ன கருமம்டா இது?” சத்தம் பொறுக்க முடியாமல் படுக்கையைவிட்டு எழும்பினேன். “என்ன நாள் டா இது” என்று புலம்பினேன். ஆனால் இந்த நாளுக்காக பலபேர் காத்திருந்ததுண்டு, ஏன் நான் கூட என் சிறுவயதில் காத்திருந்ததுண்டு. இனிப்பு, புத்தாடை, அப்புறம் பட்டாசுகள், இவற்றை தவிர்த்து ஒரு தீபாவளி நடந்துவிடாது.
      இந்த தீபாவளி எனக்கு கொஞ்சம் மாறுதலானது, நான் இப்போது சென்னைவாசி. நான் சென்னை வந்ததற்குப் பிறகு கொண்டாடும் இல்லை மன்னிக்கவும் வரும் முதல் தீபாவளி தான் இது. நெரிசலான தெரு இந்த  தெரு, ஆள் நடமாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது, நான் காவலாளியாக வேலை செய்யும் ப்ளாட்டிலிருந்து கொண்டே அந்த தெருவையும், அதில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் ரசித்தவாறு என் பொழுதினை கழித்ததுண்டு. தீபாவளி என்பதால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை , எங்கு பார்த்தாலும் குழந்தைகளின் ராஜாங்கம்தான் . நான் காவலாளியாக வேலை செய்யும் பிளாட்டிலுள்ள குழந்தைகள் அனைவரும் புத்தாடையுடன் தங்கள் பட்டாசுகளை கொளுத்த தயாராகினர். எனக்கு பட்டாசுகள் என்றால் பயமில்லை, ஆனால் ஏதோவொரு காரணத்தினால் பட்டாசுகள் எனக்கு வைரிகளாயின. இருந்தும் குழந்தைகளை ரசிக்கலாமே என்ற சுயநலத்தினால் வேடிக்கை பார்க்க தெருவுக்கு வந்துவிட்டேன்.

      ஒரே கூச்சலும் கும்மாளமும்தான், தெரு முழுவதும் பட்டாசுகள் வெடித்து சிதறிய தடையங்களே. அழுக்கு நிரம்பிய அந்த தெருவுக்கு மேலும் பல அழுக்குகள் பரிசாக தந்தது இந்த தீபாவளி. பட்டாசுகள் கொளுத்துவதற்கு குறைவேயில்லை, எப்போது ஆரம்பித்தார்கள் என்று உறுதியாக எனக்கு புலப்படவில்லை, நான் இன்று கண் விழித்ததிலிருந்து என் காதில் கணீரென சத்தம் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது. நான் காவலாளியாக வேலை செய்யும் பிளாட்டின் எதிரே ஒரு குட்டி சிமெண்ட் சீட் போட்ட வீடொன்று இருந்தது, அது தான் காளியின் வீடு. நான் அவனை அதிகமாக கண்டதில்லை, தெருவில் மற்ற குழந்தைகளிடமும் இணைந்து விளையாடியும் அவனுக்கு பழக்கமில்லை. ஆனால் நன்றாக படிப்பான் நல்லா புத்திசாலி என்றெல்லாம் தெருவிலுள்ளோர் கூறுவார், ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பதை நான் அறியவில்லை. தீபாவளி என்பதனால் என்னவோ காளி அந்த அழகான குட்டி வீட்டின் வெளியே ஒரு கிழிந்த நிக்கருடன் சுவற்றில் சாய்ந்தவாறு உட்காந்திருந்தான். அவனிடம் புத்தாடை எடுக்கவில்லையா என்று கேட்கவும் நாதியில்லை, புத்தாடை ஒன்று எடுத்துக்கொடுத்து அவனை சந்தோஷப்படுத்தவும் நாதியில்லை.
      குழந்தைகளின் கூச்சலுக்கு மத்தியில் அவன் முகம் மட்டும் வாடிப்போய் இருந்தது, நான் காவலாளியாக வேலை செய்யும் பிளாட்டிலுள்ள குழந்தைகள் பட்டாசு கொளுத்துவதையே பார்த்தவண்ணம் இருந்தான். அவன் முகத்தில் துளியும் சிரிப்பில்லை, அவன் ஏக்கம் என்னவென்று அவன் அம்மாவின் ஏசலுக்குபின் புரிந்துக்கொண்டேன். காளியின் ஆசை ஒன்றே , இந்த தீபவளியேனுமாவது ஒரு பட்டாசு கொளுத்திவிட வேண்டுமென்பதே. இந்த தீபாவளியும் அவனை வழக்கம்போல் ஏமாற்றிவிட்டது. அவன் விரக்தி நியாயமானதுதான், அவனது கண்கள் கூர்மையாக பட்டாசின் கனலின் மேல் தான் இருந்தது. ஆனால் இப்போது என் கண்கள் அவன்மேல் மட்டும் தான் இருந்தது.
      நான் காவலாளியாக வேலை செய்யும் பிளாட்டிலுள்ள குழந்தைகள் தெருவை நாசம்செய்து மகிழ்ந்தனர், தெரு முழுவதும் பட்டாசினால் எரிந்து கரியான ரசாயன காகிதங்கள்தான் , அவை தெருவின் அசிங்கத்தை அதிகரிக்க உதவிபுரிந்தது. காளி திடீரென அவன் அழகான அந்த குட்டி வீட்டினுள் சென்றான். பாவம் விரக்தியில் சென்றிருப்பான் என்று நம்பிக்கைக் கொண்டேன். இந்த வருட தீபாவளி அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஓயத்துவங்கியது, பட்டாசுகளின் சத்தம் மெல்ல குறைந்தது. என் காதுகளுக்கு ஒய்வு கிடைத்தது. என் அறைக்கு வந்தேன், அடுத்த வருடம் சிறிது காசு சேமித்துவைத்து எப்படியாவது காளிக்கு பட்டாசும் புத்தாடையும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டுமென்று மனதளவில் முடிவும் செய்தேன். போர்வையை எடுத்து தலைவழியாக போற்றிக்கொண்டு, கண்களை மூடினேன் தூங்குவதற்கு.

      திடீரென ஆக்ரோசமாய் பட்டாசுகளின் சத்தம் கேட்டது, தொடர்ந்து கேட்டுக்கொண்டு தான் இருந்தது. என்னால் தூங்க முடியவில்லை , கேட் வழியாக தெருவை பார்த்தேன், ஆச்சரியப்படுவதை தவிர வேறு வழியில்லை இப்பொது எனக்கு. பட்டாசுகளின் துள்ளல் சத்தத்திற்கு இடையே காளி உற்சாகமாக துள்ளி ஆடிக்கொண்டிருந்தான். யார் காளிக்கு பட்டாசு வாங்கிக் கொடுத்திருக்கக்கூடும் என்ற ஐய்யம் எனக்குள் பலமாக எழும்பியது. அறையைவிட்டு எழுந்து கேட்டை திறந்து வெளியே சென்றேன். மறுபடியும் ஒரு ஆச்சரியம், காளி நிஜமாகவே புத்திசாலிதான், கொளுத்தி எரிந்து தெருவையே நாசப்படுத்திய ரசாயன காகிதங்களை எல்லாம் காளி ஒன்றாக சேர்த்து பெருக்கி நெருப்பைக்கொண்டு கொளுத்துகிறான், ஆச்சரியம் என்னவென்றால் அந்த ரசாயன காகித குப்பைகளும் அவ்வப்போது வெடித்தன, பலமான சத்தம் ஏற்படுத்தின. எவ்வாரென்றால் எல்லா பட்டாசுகளும் எப்போதும் வெடித்துவிடாது, சிலவை பெரும்பாலும் எரிய ஆரம்பித்துவிட்டு அணைத்துவிடும் அமைதியாக. பிளாட்டிலுள்ள பணக்கார குழந்தைகளுக்கு அதொரு விஷயமேயில்லை, எரியாததை விட்டுவிட்டு வேறொன்றை கொளுத்துவார்கள், ஆனால் புத்திசாலி காளிக்கு இது எப்படித்தான் தோன்றியதோ. தன் ஆசை காளிக்கு முழுமையாக நிறைவேறாவிட்டாலும், முழுமையான சந்தோசத்துடன் கொண்டாடினான். நானும் நிம்மதியாக தூங்கினேன் நாளை தெருவை சுத்தம் செய்ய வேண்டாம்.தெருவும் சுத்தமானது, காளிக்கு நன்றி..               

- shiju ns

0 comments:

Post a Comment

 
Top