இன்றைய சினிமா:
ஜனநாதன் இயக்கிய பேராண்மை.
தாலீத் ஒருவனது நாட்டுப்பற்றை
காட்டும் படம்.


என் நண்பனைப் பார்த்து
விழிபிதுங்கி போனேன்
அவன் அழுகையில் ஒரு குற்றவுணர்வு
கூடவே பயமும் இருந்தது

தன் அப்பாவை அவன் திட்டியதுண்டு 
ஏன் அடித்தது கூட உண்டு
இருந்தும் அவன் அழுகிறான் 
மரணம் அத்தகைய வலிமையுடையதா என்ன? 

அப்பா என்று சொல்லி கூப்பிடமாட்டான்
இப்போது அப்பா என்று கத்துகிறான் 
அவன் கண்ணீரில் வலி தெரிகிறது
துடைத்துவிட அவன் அப்பா இல்ல என்று ஏங்குகிறான்

அப்பாவை கட்டியணைக்கிறான் 
ஏன் முத்தமிட்டும் கொஞ்சுகிறான்
பயனில்லை அவன் பாசமென்று தெரிந்தும்
அப்பா வேண்டுமென்று வெம்புகிறான்

இதைப்பார்த்து அப்பாவை மதியா நான் 
விழிபிதுங்கி போனேன்
என் அப்பா மரணமடைந்தால் 
நானும் இவ்வாறு ஆகிவிடுவேனென்று..

0 comments:

Post a Comment

 
Top