அது ஒரு அனாதை இல்லம்
ஏக்கங்களும் சோகங்களும்,
அவளோடு போட்டிபோட்டு வெற்றிக்கொண்டன
அவள் பலவீனமானவள் கண் கலங்கினாள்
அழாதே என்று சொல்ல எவருமில்லை
என்று அவள் எண்ணியிருந்தாள்
ஆனால் அப்படியில்லை
இப்போது இருக்கிறாள் ஒருத்தி
அவளும் அனாதைதான்
அதானால்தான் என்னவோ அழாதே என்றாளோ?
"பலவீனமானவளே உன் பெயரென்ன?"
நீண்ட மௌனத்திற்கு பிறகு
"பிரஜிதா " என்றாள்
இல்லை இனி உன் பெயர் அக்கா
என் பெயர் தங்கை சரியா?என்றாள்
அந்த உறவு பாடிய அனாதை
பலவீனமானவள் பலமுடையவளாய்
தன் கண்ணீரை நிற்க சொன்னாள், நின்றும் விட்டது..

0 comments:
Post a Comment