அன்பான தோழி அவள்,
அவள் அழகு என் கண்ணில் பட்டதில்லை
மாறாக அவள் அன்பைத்தான் அனுபவித்தேன்
அறிவான தோழி அவள்,
அவளை முட்டாள் என்பேன்
இருந்தும் என் சந்தேகங்களுக்கு விடையளிப்பாள்
ஆறுதலான தோழி அவள்,
அவள் கஷ்டத்திற்கு காரணமாக இருப்பேன்
அதற்கென்ன கவலைப்படாதே என்று ஆறுதலளிப்பாள்
அடக்கமான தோழி அவள்,
என்னை புகழ்த்தி பிறரிடம் பேசுவாள்
அதனால் அவள் தாழ்ந்தாலும் சந்தோசப்படுவாள்
ஏனென்றால்,
என் தோழி அவள்...

0 comments:
Post a Comment