இன்றைய சினிமா:
ஜனநாதன் இயக்கிய பேராண்மை.
தாலீத் ஒருவனது நாட்டுப்பற்றை
காட்டும் படம்.

உலகெங்கும் உண்டென்றும் இல்லையென்றும் அடிக்கடி பல விவாதங்களை கிளப்பிக்கொண்டிருப்பது கடவுள் பற்றிய கொள்கையாகும். உலகமே இரண்டாக பிரிந்து இது பற்றி பல விளக்கங்களை தந்து அவங்க முடியையும் பிச்சுக்கிட்டு கேக்கிறவன் தலையையும் தரிசுநிலம் ஆக்கிட்டாங்க.

எது எப்படியோ நாம தரிசில மாட்டாம தப்பி போய்க்கொண்டிருக்கிறப்ப கவனிச்சா இந்த கடவுள்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில இருக்கிறது தெரிஞ்சுது.
         அப்பதான், என்ன படைச்ச அப்பா அம்மா அப்பத்தா போலிருக்க, அப்பத்தாவை படைச்ச ஆண்டவன் மட்டும் பல விதத்தில இருக்கானேன்னு நம்ம மண்டையில இருக்கிற சாக்கிரட்டீஸ் சத்தம் போட தொடங்கினார். அட இதென்ன வம்பாபோச்சுன்னு பாத்தா ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு ஹெர்ஸ்டைலு ஒவ்வொரு டிரெஸ்ன்னு வெரைட்டி வெரைட்டியா இருக்கிறாங்க. பல கடவுளுங்க வாகனம் வேற வச்சிருக்கிறாங்க. நல்ல வேள மிருகங்களை வாகனமா வச்சிருக்காங்க இல்லேன்னா பெட்ரோல் போட்டே பெண்டு கழந்திருக்கும்.
           நெறத்தா பாத்தா கூட ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு கலர்ல இருக்காங்க. என்னடா இது இந்தியாவில இருக்கிற அரசியல் கட்சிகளோட கொடி கலர் கணக்கா இப்படி நம்மள கடவுள் கலர் கொளப்புதேன்னு மனுஷன் தோன்றிய காலத்த கொஞ்சம் எட்டி பாத்ததிலதான் கடவுளோட வரலாறு தெரிஞ்சுது.
            மனுஷன் பொறந்த காலத்திலேயே பயந்தான்குளியாதான் பொறந்திருக்கான். அன்னைக்கு தொட்டு இன்னைக்கு வரைக்கும் அவன் பயம் அவன விட்டு போகல்ல. அன்னைக்கு இடி, மின்னல்,மழை, வெள்ளம்னு பயப்பட்டான். இன்னைக்கு பொண்டாட்டியோட அடி, ஆபிஸ் மேனேஜர், அரகுற அரசியல், பவர்ஸ்டாரோட நடிப்புன்னு பயந்திட்டு இருக்கான், அவ்வளவுதான் வித்தியாசம்.

            அன்னைக்கு இயற்கைய கண்டு பயந்து அத வணங்க ஆரம்பிச்ச நாள்தான் கடவுளோட பிறந்த நாளா மாறிடிச்சு. சாம்பாரிலிருந்து வர்ற சமையல் வாசனை மாதிரி கடவுளோட வாசனை அங்கங்கையா பரவ ஆரம்பிச்சிருச்சு. இப்போ கண்ணுல காணுற பொண்ணுங்க எல்லாம் நல்ல ஃபிகருங்களா தெரியுறது மாதிரி அப்போ கண்ணுல கண்ட பொருளெல்லாம் கடவுளா தெரிய ஆரம்பிச்சிருச்சு.
            இப்பிடி கண்ணுல காணுறதெல்லாம் கடவுளா வணங்கிட்டா நமக்கு படையல் போட்டு கட்டுப்படியாகாதுன்னு குறிப்பிட்ட சிலத மட்டும் கடவுளா வச்சிருக்கலாம்னு கொஞ்சத்த தேர்ந்தெடுத்தான் மனிதன். நம்மள படைச்ச கடவுளும் நம்மளப் போலத்தான் இருப்பான்னு அவன் தேர்ந்தெடுத்த குட்டிக் கடவுளுக்கெல்லாம் பெரிய கடவுளாய் தனக்க சாயல்லேயே ஒரு உருவத்தை செய்துவச்சான். வச்சவன் சும்மா நிக்காம, கடவுள் பசியில பஞ்சர் ஆகுவாருன்னு நெனச்சு கடவுளுக்கே சாப்பாடு போடத் தொடங்கினான்.
            அப்பிடி என்னடா கடவுளுக்கு சாப்பிட கொடுக்கிறான்னு பாத்தா இவன் தெனமும் அடிக்கிற குவாட்டர், பீடி, கருவாட்டுக் கொளம்புன்னு குடுத்து ஒண்ணுக்குள்ள ஒண்ணா பயபுள்ளைங்க தோளில கைய போட்டுட்டு வளந்த காலம் அது. அப்பிடியே கடவுள மழை, வெயிலிலேருந்து காப்பாத்த கோயில் கட்டிக்கொடுத்து, அத சந்தோசப்படுத்த திருவிழா எல்லாம் எடுத்துகிட்டு இருந்தான்.
            இப்பிடி சந்தோசமா இருக்கிற நேரம்தான் பங்காளி சண்டைப் போல யாரோட கடவுள் பெருசுன்னு மனுசனுக்க இடையே சண்ட வந்து ஆளுக்கு ஒரு கடவுளா செய்ய ஆரம்பிச்சான். குவாட்டர் அடிச்சவன் குப்புற படுக்காம, ஆளுங்க கூட்டத்தில வந்து நின்னு தன்னோட கடவுள்தான் பெருசுன்னு கத்த ஆரம்பிச்சான். அன்னிக்குத்தான், தான் உண்டாக்கின பச்ச புள்ளன்னு கூட பாக்காம அடுத்தவன் கடவுள ஒடைக்க தொடங்கினான். உலகத்தில இதுவர நடந்த எல்லா போர விட கடவுளுக்க பெயரால நடந்த மரணம் தான் அதிகம்.

            போட்டோவிலேயும், கோயிலுக்குள்ளேயும் போட்டு அடச்சு வச்சதால என்ன செய்யுறதுன்னு தெரியாம கடவுள் அப்பிடியே முழிச்சிட்டு இருக்காரு. தான் செய்த பிள்ளைக்கிட்ட போய் “நான்தான் உன் பிள்ளை என்னைய மட்டும் காப்பாத்திகோன்னு” வேண்டிக்கிட்டு முழிச்சிட்டு நிக்கான் மனுஷன். இத எழுதிட்டு இருக்கிறப்பவே எங்கையோ கடவுளுக்க பேர சொல்லி ஒரு கொலையும், எங்கையோ ஒரு புதிய கடவுள் பிறக்கிற சத்தமும், அத வரவேற்க தயாராகிற மனுசனோட சந்தோசமும் எனக்கு கேக்குது. இவங்களயெல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் .

0 comments:

Post a Comment

 
Top