உறக்கமற்ற இரவு,
கண்ணீர்களால் நிரம்பிய தலையணை
சொல்லிமீள இன்னல்களின் திரையோட்டம்
விடிந்ததும்,
பேசத்துடிக்கும் உதடுகள்
இதையத் துடிப்பை ஆவேசமடைய செய்யும்
தருணங்கள்
மாட்டித் தவித்தேன் உன் பார்வையினில்
உன் விழிகளில்,
ஏதோ ஒரு காரணமில்லா சிரிப்பு
வெட்கங்களைத் தாண்டி ஒரு துணிவு
கேட்டுவிட்டேன்
"என் பாதியாக நீ இருப்பாயா?"
பதில்கள் எதுவும் தேவையில்லை
என்று எண்ணினாளோ?
சிரித்த கண்கள்,
வாய்விட்டு பேசாமல் செல்ல
மீண்டும் ஒரு
உறக்கமற்ற இரவு....
எழுத்து : shiju ns

0 comments:
Post a Comment