வலியின் முகத்தைப் பார்க்க
உணர்ச்சிகளுக்கு சாத்தியம்
உணர்ச்சிகளின் வலியை உணர
காயப்பட்ட இதயத்திற்கு தெரியும்
இரக்கமற்ற பச்சை ரத்தங்கள்
கசியட்டும் இருதயத்தின் உள்ளே
எனக்கென்ன ஒட்டிவிட ஆசையா?
கீறல்கள் வளரட்டும் கசியட்டும்
சிவப்பு ஈர ரத்தங்கள் ஒழுகியது
காயங்களை தாண்டி காய்ந்தது
தடம் படிந்தது , துடைத்துவிட
உன் பச்சை விரல் துடிக்கவில்லையே
என் காய்ந்த தடம் ,
உயிர் பெறலாம் , செழிக்கலாம்.
உன் பச்சை ரத்தத்தை
கசியாமல் இருக்க சொல்லிப்பார்.
எழுத்து: shiju ns

0 comments:
Post a Comment