இன்றைய சினிமா:
ஜனநாதன் இயக்கிய பேராண்மை.
தாலீத் ஒருவனது நாட்டுப்பற்றை
காட்டும் படம்.

இந்தியா சினிமாவின் நூற்றாண்டு விழா சில மாதங்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் நடக்கும் விழாக்களில் ஏதேனும் ஒரு அரசியல்வாதியை சேர்துக்கொண்டாலே அந்த விழா பாலில் கலந்த பாதரசம் புல் பயனற்றுவிடும் என்பதற்கு இந்த நூற்றாண்டு விழாவும் ஒரு சான்றாக அமைந்தது.

கலையை கௌரவிக்க வேண்டிய மேடை அரசியலை விளம்பரப்படுத்தும் ஒரு தளமாக மாறியதே மிகவும் அருவருப்பானது. ஒன்றை சொல்லிவிட்டு அதற்கு யாதொரு சம்பந்தமும் இல்லாத மற்றொன்றை செய்வது இந்த தேசத்திற்கு ஒன்றும் புதுசில்லை. அதனால் இதை நாம் பொறுத்துக்கொள்வோம்.

            அதே நேரத்தில் உண்மையாகவே கலையை நேசித்து, கலைக்காக தன்னையே கரைத்தவர்களையும் கொண்ட தேசம் இது. நமது சினிமா மரபு நாடகத்தை சார்ந்ததாகவே அமைந்துள்ளது. பேசும்படம் தோன்றுவதற்கு முன்பே இந்தியாவில் வெளியிடப்பட்ட சினிமாவில் நாடக கலைஞர்களே அதிகம் நடித்து வந்திருக்கின்றனர். ஆனால் நாடக நடிகர்களுக்கு பஞ்சமில்லாத அக்காலத்தில் பெண் நடிகைகளுக்கு பஞ்சமாக இருந்திருக்கிறது. அதற்க்கு பலகாரணங்கள் இருப்பினும் சுவாரசியமான ஒரு காரணம் யாதெனில் கேமார முன் நடித்தால் தனது அழகு குறைந்துவிடும் என்னும் நம்பிக்கையே. ஆனால் இப்போது புரோட்டா சாப்பிடுறத கூட போட்டோ பிடிச்சு பேஸ்புக்கில் போடுறதுக்க பேருதான் காலமாற்றம் போலும். இன்னொரு விஷயம் அக்காலத்தில் உள்ள உமைப்படத்தை மக்களுக்கு புரியவைக்க தேவையான வசனங்களை ஸ்கீரினுக்க பக்கத்திலே ஒரு ஆள் நின்று பேசிக்கொண்டே இருப்பாராம்.

                சமீபத்தில் The Artist என்னும் ஒரு படத்தை பார்க்க நேர்ந்தது. இந்தப்படமும் ஊமை சினிமா காலத்தில் சிறந்து விளங்கிய ஒரு நடிகர் பேசும்படம் வந்ததும் அந்த மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாமல் படும் துன்பங்களை விவரிக்கும் அருமையான படம். படத்தின் ஒரு காட்சியில்  ஸ்கீரினில் காட்டும் ஊமைப்படத்திற்கு ஏற்ற உணர்ச்சியை கொடுக்க, பக்கத்தில் பல நபர்கள் இருந்து வயலின் வாசித்து கொண்டிருப்பார்கள். உலகெங்கும் இது போல் ஆரம்பகாலகட்ட படங்களுக்கு நடந்துள்ளதை வரலாறு நமக்கு கூறுகிறது. புறக்கணிக்கப்பட்ட கலைஞர்களின் வலியை அழகாய் காட்டும் இப்படம் நமது சினிமாநூற்றாண்டு விழாவில் புறக்கணிக்கப்பட்ட கலைஞர்களை நினைவுகூர வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

0 comments:

Post a Comment

 
Top