இன்றைய சினிமா:
ஜனநாதன் இயக்கிய பேராண்மை.
தாலீத் ஒருவனது நாட்டுப்பற்றை
காட்டும் படம்.


அன்று ஒரு பெண்ணைப் பார்த்து காதலித்தேன்
அவள்தான் எல்லாமென்றும் தீர்மானித்தேன்
அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேனென்றேன்
அவள் சிந்தனைகள் நானாக இருக்க விரும்பினேன்

அன்று அவளும் என்னை காதலிப்பதாக கூறினாள்
அபார சந்தோசமடைந்தேன், வானில் குதித்து விளையாடினேன்
அவள் சிந்தனைகளில் இப்போது நான் மாத்திரம்தான் இருந்தேன்
அனைத்தும் அழகாய்மாறி என்னை சந்தோசப்படுத்தின

அன்று அவள் என்னைத்தேடி என் வீட்டிற்கு வந்தாள்
அப்போதும் என் நண்பர்களும் இருந்தார்கள்
அறிமுகம் செய்ய அவளை அழைத்தேன்
அருகினில் வந்தவள் முகத்தை கோணலாக வைத்தாள்

அதிர்ந்து போனேன் ஏனென்று அவளிடம் கேட்டேன்
அறிவுகெட்டவள் என் நண்பர்களை வெளியேற சொன்னாள்
அரக்கி அவளை கனத்த குரலில் கத்தி அனுப்பினேன்
அன்றும் என்றும் என் நண்பர்கள்தான் எனக்கெல்லாம்.


0 comments:

Post a Comment

 
Top