பள்ளி முடிந்தது
இனி எனக்கு அது சொந்தமில்லை
அதை நினைத்து
சிரிக்க, அழ மட்டும் இனி அனுமதியுண்டு
அன்னை
மடியில் கிடைத்த பாசம்
தோழன்
தோழ்களிலும் இருந்தது
தந்தையின்
கைப்பிடியில் இருந்த அக்கறை
தோழியின்
ஆறுதல் பேச்சிலும் இருந்தது
பாட்டியின்
நீண்ட அறிவுரைகளில் இருந்த கவனிப்பு
ஆசிரியரின்
காரணமற்ற அதட்டலிலும் இருந்தது
தாத்தாவின் அந்த செல்ல கோபப்பேணல்
ஆயாவின்
கனத்த குரலிலும் இருந்தது
பள்ளி முடிந்தது
தாமதமாக கற்றுக்கொண்டேன்
பள்ளியின் ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு நொடியும்
அன்பை தான் பெற்றுக் கொண்டுளேன் என்று...

0 comments:
Post a Comment