நினைவில்லை இருந்தும் ஒரே உற்சாகம்
நெடுஞ்சாலை, நீண்ட சந்தோஷம்
உரசலில் ஒரு ஆனந்த பார்வை.
பாசங்கள், இரக்கமின்றி வந்திட
கண் கலங்கி போகும் தருணங்கள்
காமங்கள், வெள்ளம்போல் மெல்ல மெல்ல
தோள்களில் கொஞ்சமாக எட்டித் தொடும்
பிறந்தநாள், கோபங்களின் தீர்வு
சங்கடங்கள் தென்றலை வீசி குளிர்காயும்
முத்தங்கள், உயிர் கொடுக்கும் எமன்
எண்ணங்களை தாண்டும் எண்ணிக்கையும் விட்டுவிடாது
பிரிவு, சோகமான வெற்றி
சந்தோஷமான தோல்வியும் சில வேளைகளில்
முதல் காதல், அடுத்த வாய்ப்பு
புதிதாய் வர்ணங்கள் தீட்டும் வெற்றிடம்.
எழுத்து : shiju ns
எழுத்து : shiju ns

0 comments:
Post a Comment