உலகில் ஒவ்வொரு நாட்டு
சினிமாவுக்கும் அதற்கான ஒரு சிறப்பு அடையாளங்கள், கூறுகள் உண்டு. அந்த வகையில்
நமது தமிழ் சினிமாவின் அடையாளத்தையும் கூறுகளையும் ஆலோசித்து எதை எடுத்து கட்டுரை
எழுதுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். காரணம் இங்கே உள்ள உலக சிறப்புமிக்க(!) ஆக்சன்
காட்சிகளை பற்றி எழுதுவதா, மூச்சு முட்டி மூணு நாள் கோமா ஸ்டேஜில கிடக்க வைக்கிற
வசனங்களை பற்றி எழுதுவதா, இல்ல மைக்ரோஸ்கோப் வச்சு தேடினாலும் கிடைக்காத ஆனா 100 நாள் ஓடுற பல சினிமாக்களை
பத்தி சொல்லுறதான்னு ஒரே குழப்பம். அப்போதுதான் குமுதா ஹேப்பி அண்ணாச்சின்னு
சொல்லுறது மாதிரி ஒரு டாபிக் மண்டையில தோணிச்சு. தமிழ் சினிமாவ பல்வேறு பாதிப்புக்குள்ளாக்கின
அந்த உலகமகா டாப்பிக்கோடா பேருதான் “தொப்புள்”
தொப்பிள்ன்னு சொன்னதும் அது
கருவறையில இருக்கிறப்ப தாயிக்கும் சேய்க்கும் உணவை தருது அப்பிடி இப்பிடின்னு
சயன்ஸ் பாடம் எடுக்க விரும்பல்ல. ஆனா தமிழர்களுக்குன்னு தவிர்க்க முடியாத சில ஆதி
புத்திகள் இருக்கு, அதில தொப்புளுக்கு முக்கிய இடம் இருக்கு. ஏன்னா சங்க
இலக்கியத்தில பல பாடல்களில் தொப்புள் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. ஒரு
தெய்வத்தோட தொப்புளிலேயிருந்து தாமரைப்பூ கூட வளர்ந்து வந்திருக்கு.(என்ன ஒரு
லொக்கேசன்)
முக்கியமா ஆணுங்க வாய்ப்பு
கிடைச்சா வாய தொறந்துட்டு இப்பவும் தொப்புள பார்த்திட்டு வக்கிரவாதிங்க என்கிற
பெயரை வாங்கிட்டு வாழுறாங்க. ஆனா ஒரு உண்மைய நாம புரிஞ்சுக்கணும். 5000 ரூபாய்க்கு
பொண்ணுங்க மேக்கப் செய்திட்டு எங்கள போகப் பொருளா பாக்கதீங்கன்னு சொல்லும்போது
எங்கப் போய் முட்டிகிட்டு எங்க சோகத்த சொல்லுறதுன்னு தெரியல்ல. இது பற்றி ரெம்ப
பேசுனா புனிதம், புண்ணாக்குன்னு பேசுறவங்க என்ன கடிச்சு துப்புவாங்க என்கிறதால இதை
விட்டுவிட்டு சினிமாவுக்கு போவோம்.
இப்படி இயல்பிலேயே ஆண்களுக்கு
இருந்த ஒரு ஆசையை வியபாரம்பண்ணி வெற்றி பெற்ற முக்கிய இடம் சினிமா. ஒரு காலத்தில 16 கஜம் சேலையை
உடம்பு முழுக்க சுத்தி கஷ்ட்டப்பட்டு கவர் பண்ணி நடிச்சிருக்காங்க. பிறகு கொஞ்சம்
கொஞ்சமா ட்ரெஸ் குறைந்தாலும் அதனால் பெரிய விளைவுகள் ஏற்படாதவாறு படத்தை
எடுத்தார்கள். ஆனா இந்த தொப்புளை அங்கம் அங்கமா முதல்ல காட்டிய புண்ணியம்
ஹேமமாலினி. ஜோதி லட்சுமியையே சாரும். இவங்கதான் படம் முழுக்க தொப்புளைக் காட்டி
அதை ஒரு கவர்ச்சி உறுப்பாக அறிமுகப்படுத்தினார்கள். அதாவது “மதர் ஆப் தொப்புள்
இன்டுரடக்சன்”.
அதன் பிறகு சில்க்
சுமிதாவிலிருந்து இன்னைக்கு இருக்கிற சமந்தா வரைக்கும் தொப்புளை தாராளமாகவே
காட்டிகிட்டு வர்றாங்க. அதிலேயும் இந்த மும்பையிலேருந்து பாட்டுக்கு நடனம் ஆட
இறக்கிறாங்களே ரிச் கேர்ள்ஸ் அவங்களா முகத்த பாக்காம தொப்புள பாத்துதான் ஆடிசன்
நடத்திறாங்க போலிருக்கு. இப்போ எல்லாம் தொப்புளுக்கு தனி மேக்கப் மேன் வைத்து லைட்டிங்கில் தனி கவனம் செலுத்தி, தொப்புள்
சினிமோட்டோகிராபிக்கு தனி டிப்ளோமோ கோர்ஸ் வைக்கிற அளவுக்கு இந்த கலை
வளர்ந்திருக்கு.
தொப்புள பத்தி இவ்வளவு பேசுறியே
அப்பிடி என்னதான் அதில பிரச்சனை, “அவங்க நாங்க பாக்கிறோம்ன்னு” நீங்க சொல்லலாம்.
அவங்க காட்டுறாங்களே, எப்படி காட்டுறாங்கன்னு கவனிச்சீங்களா?. இந்து படத்தில்
பிரபுதேவா ரோஜாவின் தொப்புளில் தேனை விட்டதோடு நிக்காம இன்னொரு படத்தில் ஆப்பாயில்
போட்டிருக்காரு. ஆப்பாயில் போட அது என்ன அடுப்பா எங்க தலைவியோட இடுப்புடா.
நம்ம விஜயகாந்த் சின்ன கவுண்டர்
படத்தில சுகன்யாவோட தொப்புளில பம்பரம் விட்டிருப்பாரு. சரத்குமார் ஏய் படத்தில
நமீதாவோட தொப்புளில தண்ணிய விட்டு உறிஞ்சு குடிச்சிருக்காரு. பாவம் மனுஷன் இத அந்த
காலத்தில செய்தாரு, இப்போ செய்திருந்தாருன்னா உறிஞ்சி குடிச்சே உசிர விட்டிருப்பரு(பின்ன
என்ன எங்க தெய்வம் நமீதாவோட இடுப்பு சாதாரண இடுப்பா. 5 ஆயிரம் லிட்டர் தண்ணிய
அசால்ட்டா விடுற டேங்குடா, சந்தேகம் இருக்கிறவங்க பாருங்க).
மேல சொன்ன லிஸ்ட் பெரிய மனுசங்க
தொப்புள படுத்தின பாடு. இது தாண்டி பல நடிகர்கள் தொப்பிளில் பூ நட்டு வச்சாங்க,
பீரை ஊற்றி அதில விட்டு குடிச்சாங்க, ஆப்பிளை குறி பாத்து அடிச்சாங்க(நல்ல வேளை
பலா பழத்தை try பண்ணல), எண்ணெய் விட்டு சந்தோசபட்டாங்க, கடல்ல படுக்க வச்சு மணலை
அள்ளி அள்ளி கொட்டினாங்க(அடேய் மண்ணு கொட்டுற இடமா அது மானங்கெட்டவங்களே). ஒரு படி
மேல போய் காதில மாட்ட வேண்டிய வளையத்தை தொப்புளில் மாட்டினாங்க. உலக சினிமா
வரலாற்றிலேயே ஒரு உறுப்பினால இவ்வளவு விசயங்களை செய்ய முடியும்ன்னு
ஹாலிவுட்காரங்களுக்கே கத்து கொடுத்திருக்கோம்.
இதே நேரம் நாம தெலுங்கு சினிமா பக்கம்
போனோம்ன்னா அங்கயெல்லாம் தொப்புள் ஒரு உறுப்பு கிடையாது படத்தோட உயிர். ஏன்னா
வழியே போறவங்களையும் பிடிச்சு பிரேமுக்குள்ள கொண்டுவந்து தொப்புள காட்டிட்டு தான்
விடுவாங்க. காத்துகூட துணியப் புரட்டிப்போட்டு தொப்புள ரசிகனுக்கு
காட்டிக்கொடுப்பதில அவ்வளவு சந்தோசப்படுது. ஹாலிவுட் சினிமாவுக்கே கவர் ஸ்டோரி
பண்ணுற அளவுக்கு தொப்புள காட்ட ஆந்திராகாரங்களால மட்டும்தான் முடியும்.
என்னடா சினிமாவில இருந்துகிட்டு
தொப்புள பத்தி இப்படி பேசுறானேன்னு நெனச்சீங்கன்னா தேவையான இடத்தில தொப்பிள்
கண்டிப்பா காட்டணும்ன்னு சொல்லுறவந்தான் நான். உதாரணமா பல வெளிநாட்டு படங்களில
நிர்வாண காட்சிகள் இருக்கும். அதில் தேவைக்கு ஏற்ப வைக்கிற காட்சிகள் ஒரு போது
காமத்தை தூண்டுவதில்லை. ஒரு உதாரணம் டைட்டானிக் படத்தில் வரும் முத்த காட்சிகளும்,
கட்டில் காட்சிகளும் பார்ப்பவருக்கு காமத்தை தூண்டாது. நல்ல கேமரா கோணத்தில் நல்ல
காட்சியாக எடுக்கும் நிர்வாணம் கண்டிப்பாக கலைக்கு காமத்தை தராது என்பதை
நம்புகிறவன் நான். குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும் போது வெளியே
கண்டுகொண்டிருக்கும் தொப்புள் யாருக்கும் கவர்ச்சியை தருவதில்லை. ஆனால் தொப்புளில்
தேனை ஊற்றி நக்கும் காட்சிதான் கவர்ச்சியின் உச்சம். காட்ட வேண்டிய விதத்தில் நாம்
காட்டும் போது தொப்புளும் கலையாகும். இறுதியாக ஒரே ஒரு கேள்வி : “ஆண்களுக்கு
கூடத்தான் தொப்புள் இருக்கு பொண்ணுங்க ஏன் அதை ரசிக்கிறது
இல்ல”?.............யாராவது பதில் தெரிஞ்சா சொல்லுங்களேன்...
0 comments:
Post a Comment