உன்னோடு பேசிய,
வார்த்தைகள் கொஞ்சமே
நம்மோடு கைகோர்த்தது
பல மௌனங்களே.
உன் வியர்வை,
மணம் பலநாள், என் சுவாசத்தோடு
அழுக்கு சட்டையும்
வெண்மையான உன் இயற்கை வாசத்தோடு
நான் தூங்க, நீ
கல்லாய் செதுக்குகள் கொண்டாய்
இரக்கமற்ற கலை
என்னை சிற்பி என்றது
அன்று உன் விரல்பிடித்து
பறந்த அஞ்சாப்பிஞ்சு நான்
இன்று உன்னுயிரை
கரைத்து குடித்த அசுரக் கொடியனானேன்
“அப்பா”
இந்த வார்த்தையொன்று போதும்
நான் விழித்து நீ கண்கலங்க,
என்னைக் கட்டியணைக்க, பல முத்தங்கள் தர....
எழுத்து : shiju ns

0 comments:
Post a Comment