இன்றைய சினிமா:
ஜனநாதன் இயக்கிய பேராண்மை.
தாலீத் ஒருவனது நாட்டுப்பற்றை
காட்டும் படம்.

அது ஒரு அழகான சாயங்கால வேளை, நானும் என் மனைவி சுமதியும் கைகோர்த்தபடி நடக்க ஆரம்பித்தோம், பல குழப்பங்களும் சலனங்களும் எங்கள் இருவரிடமும் இருந்தன, எனினும் காரணங்களை தாண்டி எங்கள் கனவை நோக்கி நடந்தோம். எங்களுக்கு திருமணமாகி 5 மாதம் கூட முடியவில்லை எனினும் ஏன் ஒரு குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்று என் வீட்டாரும், சுமதி வீட்டாரும் கூறாத அறிவுரையும் இல்லை, திட்டாத திட்டும் இல்லை.
 
             நானும் சுமதியும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். என்னுடைய பள்ளி தோழி தான் சுமதி .அது மட்டும் இல்லை என்னுடைய பக்கத்து  வீடும் கூட. எங்களுடைய நட்பு நாளைடைவில் காதலாக மாறி நட்பை களங்கப்படுத்தியது... ஆனால் அத்தோடு இருந்திருக்கலாம். காதலில் காமுமும் மெல்ல மெல்ல தன் விஷத்தை கக்கியது. அலைபாயும் வயது அல்லவா அது? எல்லையற்று சென்றது. சுமதி கர்ப்பம் அடைந்து விட்டாள். பல யோசனைகள் செய்தோம், என்னவாக இருந்தாலும் எங்கள் வயதுக்கு அப்பாற்பட்ட செயல் அது. எனினும் சின்னப்பிள்ளைத்தனம், நாங்கள் செய்த தவறை மறக்க வேண்டும் என்றே தோன்றியது....    

             நண்பர்கள் பலபேர் ஆலோசனை மற்றும் உதவியால், கருவை கலைக்க முடிவு செய்தோம். கருவை கலைத்துவிட்டால் எல்லா பிரைச்சனைகளும் தீர்ந்து விடும் என்று நாங்கள் எண்ணினோம். ஆனால் அப்படி நடந்திருக்க கூடாது அவளுக்கு. உண்மையிலையே சுமதி கற்பமடையவில்லை, கர்ப்பம் இனிமேலும் அடையவும் மாட்டாள் என்று டாக்டர் கூரிவிட்டார். என்னை புரட்டியெடுத்த செய்தி அது. நான் தலைகீழாய் நிற்பதை போல உணர்தேன். என் கவலை எல்லாம் சுமதியை பற்றி தான் இருந்தது. என்னவோ தெரியவில்லை அவள் மேல் அன்பும் மரியாதையும் கூடியது, பருவமடைந்தவனை போல சிந்தித்தேன், அதற்க்கு காரணம் அவள் மேல் எனக்கு இரக்கம் கூட தோன்றியிருக்கலாம், எதுவாக இருந்தாலும் என் பார்வை தெளிவானது என்று மகிழ்ச்சி கொண்டேன்..

             சுமதியினால் எப்போதும் கர்ப்பமடைய முடியாது என்று அவளிடம் கூட மறைத்தேன். அவளை திருமணம் செய்ய வேண்டும் என்று மனதளவில் வாக்குறுதி கொண்டேன். நாட்கள் மின்னலாய் கடந்தன, அவளையே திருமணமும் செய்துகொண்டேன். என் பிரச்சனை அங்கே தான் ஆரம்பித்தது. என் சுமதியினால் கற்பமடைய முடியாது என்பதை நான் எல்லோரிடமும் எப்படி கூருவேன். என் சுமதி மனமுடைந்து போக மாட்டாள்? அனால் என் பாரத்தை அப்படியே இறக்கி வைத்தால் என் சுமதி....

              “ஏங்க நாம ஒரு குழந்தயை பெத்துகிறத்துக்கு, ஏன் தத்து எடுக்க கூடாது? நம்ம அழிச்ச ஒரு உயிருக்காக இத செய்யலாமே?....”

               எனக்குள் ஏதோ இனம் புரியாத உற்சாகம், எதுவும் பேசாமல் அவள் மடியில் குழந்தையை போல படுத்தேன், இனிமையான தருணம் அது. நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை, அதுதான் ஒரு வேகத்தில் கிளம்பி வந்துவிட்டோம். அனாதை இல்லம் நெருங்க நெருங்க என் பதட்டம் அதிகரித்தது, ஒரு வேளை, இது சந்தோசத்தின் உச்சக்கட்டமாக கூட இருக்கலாம். இப்போது எங்கள் கனவு எல்லாம் ஒரு குழந்தை தான், கோர்த்திருந்த எங்கள் கைகளை விட்டோம். காற்றின் இசைக்கேற்ப குழந்தைகளின் சத்தம் எங்கள் காதில் “யானியின்” இசையாய் கேட்டது.

                அனாதை இல்லத்தின் வாசலை தாண்டி விட்டோம் சுற்றி முற்றி பார்த்தால் எங்கும் பசுமையின் சின்னம் தான்.ஆப்பிஸ் ரூம்மிற்கு வழி சொல்லி தந்தார் காவலாளி. ரூமினுள் நுழைந்தோம் சற்று பதட்டம் குறைந்தது.

               “உக்காருங்க சார்” என்றார் நிர்வாக மேலாளர். சுமதியை திரும்பி பார்த்தேன் அவள் கண்கள் ஜன்னலை தாண்டி வெளியே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் சத்தத்திற்கு அடிமையானது என்று புரிந்தது.

               சொல்லுங்க சார் எந்த குழந்தை வேணும்? ஆண் குழந்தையா இல்ல பெண் குழந்தையா? சிறிதும் யோசிக்காமலே சுமதியின் அழகான முகத்தை பார்த்தவாறே, பெண் குழந்தை என்றேன். எனக்குள் அவளைப் போன்ற குழந்தைக் கிடைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டேன்.

              எங்களை குழந்தைகளிடம் அழைத்து சென்றார் மேலாளர். ஏதோ பூக்கள் நிறைந்த கடலில் குதித்தது போல ஒரு மகிழ்ச்சி எங்களுக்கு. ஆனால் அந்த பூக்கூட்டத்தினிடையே ஒரு வாடிய ரோஜாவை பார்த்தேன். சுமதியை திரும்பி பார்த்தால் அவள் கண்களும்அந்த வாடிய ரோஜாவையே நோட்டம் இட்டது. எல்லா குழந்தைகளும் விளையாடிக் குதிக்கும். அந்த வேளையில் கூட ஏன் அந்த ஒரு குழந்தை மட்டும் அமைதியாக இருக்கிறது என்று மேலாளரிடம் கேட்டேன்.
             “அவ பேரு பிரஜிதா சார் ரெண்டு மாசம் முன்னாடி தான் இங்க வந்தா... இதுல ஆச்சரியம் என்னன்னா? இவளை விட்டுட்டு போனதே அவ அப்பா அம்மா தான் “

          
            “ என்ன மேடம் சொல்றீங்க? ஏன் அப்படி பண்ணினாங்க?”

             “என்ன பண்றது சார் எல்லாம் காசு தான் அதில பெரிய அரசியலே இருக்கு அதில தலை போட விரும்பல” என்று மழுப்பிகொண்டு பேச்சை மாற்றி விட்டார்...

             “அப்போ சரி சார் அடுத்த வாரம் நல்ல முடிவு பண்ணீட்டு வாங்க எந்த குழந்தையை தத்து எடுக்கனும்னு. “

              அவர் என்னத்தான் கூறினாலும் பிரஜிதாதான் என்று என் மனம் முடிவுக்கு வந்தது. என்னவாகட்டும் சுமதியிடம் ஒரு வார்த்தை கேட்கலாம் என்று முடிவு செய்தேன். சற்று தயங்கியவாறு தான் அவளிடம் கேட்டேன்.

              “ஏன் சுமதி நம்ம அந்த பிரஜிதாவையே தத்து எடுக்கக் கூடாது? அவள் எதுவும் பேசவில்லை கண்கள் மட்டும் கலங்கினாள், அப்படியே என் மடியில் படுத்து கொண்டாள், அவள் கண்ணீரில் எப்பொழுதும் ஆழமான ஒரு காதல் இருக்கும், எனக்கு அது நன்றாகவே தெரியும்.

              என் வீட்டாரிடமும் அவள் வீட்டாரிடமும் பிரஜிதாவை தத்து எடுப்பதை பற்றி கூறினோம். அவர்கள் சம்மதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அல்ல, அவர்கள் சம்மதம் தேவை இல்லை என்ற முடிவோடு.

              எங்கள் எண்ணம், கனவு முழுக்க பிரஜிதாவானது.எனக்கும் சுமதிக்கும் புதிய உற்சாகம் தோன்றியது,இந்த வாரத்தை எப்படியாவது கடத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. எங்கள் கும்பத்தில் புதிதாக இணையப் போகும் குட்டி தேவதை பிரஜிதாவை பற்றியது தான் எப்பொழுதும்.அவளை சேர்க்க வேண்டிய பள்ளி அவளுக்கு தேவையான பொருட்கள் என்று எல்லாம் மனம் தேட தொடங்கியது.

              சட்டென்று என் அலைபேசி அடித்தது, அனாதை இல்லம் மேலாளரிடம் இருந்து வந்த அழைப்பு அது, நானும் சுமதியும் நடுங்கி போனோம். பிரஜிதாவை அவள் பெற்றோர் அழைத்து சென்றிருப்பார்களோ? என்று மனம் கற்பனை செய்ய ஆரம்பித்தது.
            “ ஹலோ...” என்று தயங்கியவாறு பேசினேன்
“சார் நான் st.Mary’s அனாதை இல்லம் மேலாளர் பேசுறேன்”             

“தெரியுது மேடம் சொல்லுங்க”

“இல்ல சார் நான் இதை சொல்லக்கூடாது இருந்தாலும் சொல்றேன், பிரஜிதாவை நீங்க ஏன் தத்து எடுக்கக்கூடாது”

பதட்டப்பட்ட மனது சட்டென்று பட்டம் போல் மிதந்தது.....

“அப்பாட நானும் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்... மேடம் இத நீங்க சொல்ல வேண்டியது அவசியமே இல்ல, இதை ஏற்கனவே நாங்க முடிவு பண்ணிட்டோம்”.

      “அப்படியா சார் ரொம்ப சந்தோஷம் பிரஜிதா ரொம்ப பாவம் சார் சந்தோஷமாவே இருக்கமாட்டா, சரியா சாப்பிடமாட்டா, யார் கூடவும் பேசவும்மாட்டா, ஆனா ஆச்சிரியமா இருக்கு நீங்க இனி எப்போ வருவீங்கனு கேக்கிற? “

      “நிஜமாவா சொல்றீங்க மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்கு இத கேட்க”

      “ஒகே சார் அப்போ நான் வச்சிடுறேன் நல்ல முடிவாவே எடுங்க “

      பிரஜிதாவிற்கு எங்கள் மேல் விருப்பம் இருக்கிறது என்று  தெரிந்த அடுத்த நொடி எங்களால் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை, மறுநாளே அனாதைஇல்லம் சென்றோம்... எங்கள் பார்வை மொத்தம் பிரஜிதாவைத்தான் தேட கட்டளையிட்டது....

      ஒரு பம்பரத்தை சுற்றியபடி குனிந்த இருந்த பிரஜிதாவின் கன்னத்தை மெதுவாக பிடித்து தலையை நிமிர்த்தினாள் சுமதி.அவள் கவனம் பம்பரத்தின் மேல் என்று எண்ணினோம், ஆனால் அந்த 6 வயது சிறுமிக்கு அப்படி என சோகம்? அவள் கண்கள் சிவந்து கண்ணீரால் நிறைந்து நின்றது...மனமுடைந்து போனேன்... மனமுடைந்தது, .பிரஜிதாவின் கண்ணீரினால் அல்ல, என் சுமதி எடுத்த முடிவினால் அது... இதை நான் அவளிடம் இருந்து எதிர்ப்பார்க்கவில்லை, பிரஜிதா வேண்டாம் என்று ஒரே பேச்சில் கூறி விட்டாள்.

      சுமதியை சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் மறுபடியும் கூறினேன் ஆனால் அவள்,
      “இல்லேங்க நாம சந்தோஷமா இருக்கிறதுக்கு தான் குழந்தை தத்து எடுக்கிறோம் ஆனா இப்படி எப்பவுமே அழுதிட்டு இருக்கிற குழந்தையை எப்படீங்க தத்து எடுக்கறது? நாம பேசாம குழந்தைய பெத்துக்கலாம்”         
     

      அதிர்ச்சி அடைவதை தவிர எனக்கு வேறு வழி இல்லை...எப்படி அவளால் குழந்தை பெற முடியும்? கண்ணீரின் மதிப்பை அறிந்த சுமதிக்கு ஏன் அந்த பச்சை மண்ணின் கண்ணீரை துடைக்க முடியாதா? என் சுமதி என்ன சுயநலவாதியா? இப்பொழுது என் கவலை சுமதியின் கர்ப்பமின்மையை பற்றியது அல்ல.. பிரஜிதாவை பற்றியது... அவள் எப்படி சங்கட பட்டிருப்பாள்? பல குழப்பங்களுடனும், சின்ன நம்பிக்கை, எல்லாம் மாறும் என்றும்..அனாதை இல்லத்தை விட்டு இந்த அழகற்ற அதே சாயங்கால வேளையில் திரும்பி செல்கிறோம் .....

எழுத்து: Shiju NS
புகைப்படம்: Valan Anand

0 comments:

Post a Comment

 
Top