இன்றைய சினிமா:
ஜனநாதன் இயக்கிய பேராண்மை.
தாலீத் ஒருவனது நாட்டுப்பற்றை
காட்டும் படம்.

தமிழ் சினிமாவில் அரசியல் படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதிலும் மணிரத்னம், சங்கர் படங்கள் பொதுபுத்தி என்ன விரும்புகிறதோ அதை பிரதிபலிப்பவை(ரோஜா, இந்தியன்). இவர்களின் படங்களுக்கும் விஜயகாந்த் மற்றும் அர்ஜுன் படங்களுக்கு கருத்தியல் ரீதியாக பெரிய வித்தியாசம் இருப்பதில்லை.
          
மணிவண்ணன் இயக்கியிருக்கும் படங்கள் மேற்கண்ட இயக்குனர் பெருந்தகைகளின் படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. அவர் தன் படங்களின் மூலம் பெரியாரியம், பொதுஉடைமை, தமிழ்தேசியம் என்ற பல்வேறு பரப்புகளில் தன்னை நிலைநிறுத்தியவர். இருப்பினும் தமிழ் சினிமா அவரை வெறும் வணிக இயக்குனர் என்ற கட்டத்தில் அடைத்து வைத்தது.
           இந்நிலையில் தலித்துகளை பற்றி பேசும் சினிமா வளர்ந்திருக்கிறது(பேராண்மை, அமைதிப்படை, வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா). ஆனால் முழுக்க முழுக்க தலித்துகளுக்கான படமென்று அட்டகத்திக்கு முன்பு வரை எதுமில்லை என்றுதான் நினைக்கிறேன். அவரது இரண்டாவது படமும் மாட்டு இறைச்சி அரசியல் கொஞ்சம் ஆழமாகவும், அதே சமயம் சினிமா அழகியலுக்கு உட்பட்டும் பேசுகிறது. இந்த படத்தில் கதாநாயகன் காளி(கார்த்தி) கதாபாத்திரம் தொடங்கி  அன்பு, மேரி, என ஒவ்வொரு கதாபாத்திரமும் இயல்பாகவும் நேர்த்தியாகவும் படைக்கப்பட்டு இருக்கிறது.
          சந்தோஷ் நாரயணன் தமிழ் சினிமாவின் முக்கியமான வரவு. புதுபுது சத்தங்கள், கானா என அப்ளாஸ் அள்ளுகிறார். முரளியின் ஒளிப்பதிவு கதை கூடவே செல்கிறது. ரஞ்சித் வெறும் மைய்ய கதாபாத்திரத்தை மட்டுமே நம்பாமல் Hip pop Dance ஆடும் பசங்க, மனநிலை பாதிக்கப்பட்ட ஜானி என விதவிதமாக வழிநெடுக பல கதாபாத்திரங்கள் வந்து போகின்றன. இப்படத்தில் காட்டப்படும் சுவர் வெறும் சுவர் அல்ல படிமம் , அதிகார பரவுதல். ரஞ்சித் தலித்துகளுக்கு ஆதராவாக பேசவில்லை ,ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் தலித்தை அடையாளபடுத்துகிறார். அந்தவகையில் இது முக்கியமான படம்.                                                                                               
எழுத்து : Valan Anand

0 comments:

Post a Comment

 
Top